ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வெள்ளோட்டம்

சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லாத வகையில் ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது.
ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வெள்ளோட்டம்
x
சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லாத வகையில்,  ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில், ஜெர்மனியில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. மின்சாரத்திலும், டீசலிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில், இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செலவு அதிகம் என்கிற போதிலும், எந்த விதத்திலும், கார்பன் டை ஆக்ஸைடை இது வெளியிடாது. அதிக பட்சமாக 140 கி.மீ. வேகத்தில், இந்த ரயில் இயங்குகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க, ஜெர்மனி முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்