அணு ஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வட கொரியா ஒப்புதல்

வெளிநாட்டு நிபுணர்களின் முன்னிலையில் அணு ஆயுத வளாகத்தை "நிரந்தரமாக" அழிக்க வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது.
அணு ஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வட கொரியா ஒப்புதல்
x
மூன்றாவது கொரிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நேற்று வட கொரியா சென்றார். இதையடுத்து, பியோங்யாங்கில் இன்று நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அணுஆயுத வளாகத்தை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிக்க வட கொரிய அதிபர் உறுதியளித்துள்ளதாக தென் கொரிய அதிபர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் வட கொரியாவின் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்