வட கொரியாவில் தென் கொரியா அதிபர் : ராணுவ அணிவகுப்புடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

வட கொரியாவுக்கு சென்ற தென் கொரிய அதிபருக்கு பியாங்யாங் விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வட கொரியாவில் தென் கொரியா அதிபர் : ராணுவ அணிவகுப்புடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
x
வடகொரியாவில் இன்று நடைபெற இருக்கும் 3 வது கொரிய மாநாட்டில் இரு நாட்டு அதிபர்கள் இடையே, அணு ஆயுத ஒப்பந்தங்களை கைவிடுதல் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்காக, வட கொரியாவுக்கு சென்றுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரது மனைவியை வட கொரிய அதிபரும், அவரின் சகோதரியும் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, காரில் ஊர்வலமாக தென்கொரிய அதிபர் அழைத்துச் செல்லப்பட்டார். வழி நெடுகிலும் பூங்கொத்துகளை ஏந்தியபடி, வட கொரிய மக்கள் அவரை வரவேற்றனர். இரு நாடுகளுக்கு இடையே மலர்ந்துள்ள நட்புறவால்,, வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்