இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் பலியாகினர்.
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை
x
இந்தோனேஷியாவின் லம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தை தொடர்ந்து 2 முறை இலேசான அதிர்வு ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில்,இடிபாடுகளில் சிக்கி 72 வயது முதியவர் உள்பட 19 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வு அண்டைப் பகுதியான பாலியில் நன்கு உணரப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல மட்டாராமில் இருந்து 955 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாவனிஷ் நகரான பான்டங்கிலும் நிலநடுக்கத்தில் தாக்கம் இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்