பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு - 85 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறு

பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு - 85 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறு
x
* மொத்தமுள்ள 272 எம்.பி. பதவிகளுக்கும், 577 பிராந்திர உறுப்பினர் பதவிகளுக்குமான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

* 85 ஆயிரம் வாக்கு மையங்களில், காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

* பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று மாலையே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

* பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

* ஆட்சியைப் பிடிப்பதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சிக்கும், சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. 

* பல்வேறு ராணுவ கிளர்ச்சிகள் நடைபெற்ற பாகிஸ்தானின் வரலாற்றில், பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இரண்டாவது தேர்தல் இது என்பதால் உலக நாடுகளின் பார்வை பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்