ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஜூலியன் அசாஞ்சே

விக்கி லீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்சேவை, இங்கிலாந்து அரசிடம் ஒப்படைக்க, ஈக்வேடார் அரசு முடிவு செய்துள்ளது.
ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஜூலியன் அசாஞ்சே
x
* ஆறு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ராணுவம் தொடர்பான முக்கிய ரகசியங்களை, தனது விக்கி லீக்ஸ் வலைதளத்தில் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டார். 

* அதைத் தொடர்ந்து அசாஞ்சே மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிரம் காட்டியது. இதை அறிந்த அசாஞ்சே ஸ்வீடன் நாட்டிற்கு தப்பிச் சென்றார். 

*அங்கு அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க லண்டன் சென்றார். இதையடுத்து,  அங்குள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார். கடந்த 5 ஆண்டுகளாக, ஈக்வேடார் தூதரகத்தில் வசித்து வரும் அசாஞ்சேவை, இங்கிலாந்து அரசிடம் ஒப்படைக்க, ஈக்வடார் அதிபர் லெனின் மோரெனோ முடிவு செய்துள்ளார். 

* இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்படும் அசாஞ்சேவை, விரைவில் அமெரிக்காவிடம்  இங்கிலாந்து ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்