கின்னஸ் சாதனை படைத்த உரங்குட்டான் குரங்கு, தமது 62வது வயதில் உயிரிழந்துள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த உரங்குட்டான் குரங்கு, தமது 62வது வயதில் உயிரிழந்துள்ளது.
கின்னஸ் சாதனை படைத்த உரங்குட்டான் குரங்கு, தமது 62வது வயதில் உயிரிழந்துள்ளது.
x
ஆஸ்திரேலியா : சுமார் 11 குட்டிகள் மற்றும் பேரக் குழந்தைகள் என, பெயர் பெற்றதோடு, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்ற, 62 வயதான Puan என்ற உரங்கட்டான் குரங்கு, ஆஸ்திரேலியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் உயிரிழந்தது. உலகிலேயே மிகவும் வயதான உரங்கட்டான் குரங்கு இதுவாகும். உராங்குட்டான் வகை குரங்குகள், சுமார் 50 வயதிற்கு மேல் உயிர்வாழ்வது கடினமானதாகும்... ஆனால், இந்த உராங்குட்டான், 60 வயதுக்கு மேல் வாழ்ந்தது மிகப் பெரிய சாதனை என, நெகிழ்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள் வியந்துள்ளனர். 

Puan எனப் பெயரிடப்பட்ட இந்த உராங்குட்டான் குரங்கு, கடந்த 1956-ம் ஆண்டு பிறந்தது. மலேசியாவில் உள்ள சுல்தான் மிருகக்காட்சி சாலையில் இது வளர்ந்து வந்தது. அதன்பிறகு, ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மிருகக்காட்சி சாலைக்குக் கடந்த 1968-ம் ஆண்டு இது கொண்டு வரப்பட்டது. அங்கு 11 குட்டிகளை ஈன்றது. இதன் வம்சாவளியினர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சுமத்ரா தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் பரவிக் கிடக்கின்றனர்.

அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ள உராங்குட்டான் குரங்குகள், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. 

உலகின் மிக வயதான Puan, `சுமத்திரன் உராங்குட்டான்' (Sumatran orangutan) என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த நிலையில் தான், 62 வயதான நிலையில் இரண்டு குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பெர்த் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த புவன் உயிரிழந்தது.

Next Story

மேலும் செய்திகள்