கட்டுப்பாடுகளே இல்லாத கல்விமுறை தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை

கட்டுப்பாடுகளே இல்லாத கல்விமுறை தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை. கற்பித்தல் இல்லை... வருகையும்க ட்டாயமில்லை.இப்படியும் இருக்கிறது ஒரு பள்ளிக்கூடம்
கட்டுப்பாடுகளே இல்லாத கல்விமுறை தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பெயர், ப்ரூக்ளின் ஃப்ரீ ஸ்கூல் (Brooklyn Free School) ஆகும்... இங்கு, கல்வி இலவசமல்ல... ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். 

இவ்வளவு கட்டணம் வசூலித்தாலும், இங்கு சொல்லிக் கொள்ளும்படி, கல்வி கற்பித்தல் கிடையாது. காரணம், இங்கு எதுவுமே கற்பிக்கப்படுவதில்லை. எதுவும் கற்பிக்கப் படாதது தான், இந்தப் பள்ளியின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. அதாவது, இந்தப் பள்ளியில் பாடம் கிடையாது. வீட்டுப் பாடமும் தர மாட்டார்கள். தேர்வு கிடையாது என்பதால், தர வரிசையும் இல்லை... தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. 

உணவுகளை ருசி பார்ப்பது, புத்தகங்கள் பற்றி விவாதிப்பது, கலந்துரையாடுவது, சிறியதாக வியாபாரம் செய்வது என்பன போன்றவை தான், இங்கே நடைபெறும் வகுப்புகளாகும். எல்லையற்ற சுதந்திரம் மாணவர்களுக்கு, இங்கு அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் யாரையும் அடிப்பதில்லை. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த, எந்த வகுப்பில் வேண்டுமானாலும் அமரலாம். இல்லாவிட்டால் தனியே புத்தகத்தையோ, கணினியையோ எடுத்துக்கொண்டு ஒதுங்கிவிடலாம். 4 வயதில் இருந்து 18 வயது வரையிலான மாணவ, மாணவிகள் இங்கே இருக்கின்றனர். 

பள்ளி எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்ன கற்றுத் தர வேண்டும் என்பனவற்றை எல்லாம் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கே மாற்றியமைக்கப்படுகின்றன. உலகிலேயே இத்தனை சுதந்திரமான பள்ளி எங்கும் இல்லை என்பதால்தான், இதற்கு ''ஃப்ரீ ஸ்கூல்'' என  பெயர் வைத்திருக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்