சிங்கள ராணுவ அதிகாரியை கண்ணீருடன் வழியனுப்பிய தமிழர்கள்..
பதிவு : ஜூன் 13, 2018, 01:46 PM
மாற்றம் : ஜூன் 13, 2018, 02:29 PM
இலங்கை வடக்கு மாகாணத்தில் இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் சிங்கள ராணுவ அதிகாரி ஒருவருக்கு கண்ணீருடன் தமிழ் மக்கள் விடை கொடுத்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வடக்கு மாகாணத்தில் இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் சிங்கள ராணுவ அதிகாரி ஒருவருக்கு கண்ணீருடன்  தமிழ் மக்கள்  விடை கொடுத்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைநகரமாக விளங்கிய பகுதி கிளிநொச்சி. இந்த சிறிய நகரில் இருந்த பெரும்பாலானோர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள்.போருக்கு பின்னர் இவர்கள் மிகுந்த வேதனைகளை சந்தித்தனர். ராணுவ அடக்குமுறைக்கு  பயந்து வீடுகளில் முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் தான் கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் ரத்னப்ரியா பந்து என்ற சிங்கள அதிகாரி. முதலில் அவர் வீடு வீடாக சென்று மக்களை அழைத்து, தொழிற் பயிற்சி அளிப்பதாக சொன்னபோது, மற்ற சிங்கள அதிகாரிகளை போலவே இவரையும் பார்த்து அச்சமடைந்துள்ளனர். ஆனால், வருடங்கள் செல்ல செல்ல உண்மையிலேயே தன்னலமற்ற சேவை செய்வதை அறிந்து தமிழ் மக்கள் இவரை நாட துவங்கியுள்ளனர். 

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து போரின் போது கை கால்களை இழந்தவர்களுக்கு இவர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை. பல வருடங்களாக தன்னால் இயன்ற அளவிற்கு தமிழ் மக்களுக்கு உதவி செய்து, அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற சிங்கள அதிகாரி ரத்ன ப்ரியா பந்து சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் தெற்கு பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதை அறிந்த கிளிநொச்சி பகுதி மக்கள் அவரது அலவலகத்தில் குவிய துவங்கினர்... கண்ணீர் சிந்தி கதறினர்.

அவருக்கு மாலை மரியாதையுடன் வரலாறு காணாத வகையில் வழியனுப்பு விழா நடத்தினர். இந்த சம்பவம் வடக்கு மாகாண தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களிடையே பெரிய அளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'மக்களை பிரிப்பது அரசியல் வாதிகள் தான். தமிழ் மக்கள் எங்கள் சகோதரர்கள். அவர்களுக்கு வேண்டியதை உடனடியாக செய்து கொடுங்கள்' என சிங்கள மக்கள் சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் 

பிற செய்திகள்

இந்தியா - மொரிஷியஸ் இடையே 200 ஆண்டுகால தொடர்பு...

இந்தியாவிற்கும் மொரிஷியஸ் நாட்டிற்கும் 200 ஆண்டுகால தொடர்பு உள்ளது என மொரிஷியஸ் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.

67 views

சிங்கப்பூர் - அமெரிக்கா இடைநில்லா விமான சேவை

உலகின் மிக நீண்ட தூர விமான பயணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியது.

1930 views

உலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம்...

உலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

9111 views

காண்போரை மகிழ்விக்கும் யானை குட்டிகளின் சுட்டித்தனம்..

அமெரிக்காவில் பிறந்து சில வாரங்களேயான இரண்டு யானை குட்டிகளின் சுட்டித்தனம் காண்போரை கவர்ந்துள்ளது.

151 views

நோயை வென்று சாதனை படைத்த வீரர்

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் மன உறுதியால் தடகள வீரராக மாறினார்.

108 views

"மைக்கேல்" புயலுக்கு இதுவரை 7 பேர் பலி

அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

217 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.