பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் பாஸ்போர்ட் ரத்து...?

பாகிஸ்தான் முன்னாள் அதிபர், முஷரபின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் பாஸ்போர்ட் ரத்து...?
x
பாகிஸ்தானில் கடந்த 2007ம் ஆண்டு முஷ்ரப் அதிபராக இருந்தபோது நெருக்கடி நிலையை அறிவித்து நீதிபதிகளை சிறையில் தள்ளினார். மேலும், 100 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.  இது தொடர்பாக  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, 2016ல் வெளிநாடு சென்ற அவர் நாடு திரும்பவில்லை. 
இந்நிலையில், அவரது பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையை ரத்து செய்து பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன்படி, அவற்றை ரத்து செய்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால் எந்த நாட்டுக்கும் முஷ்ரப் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்