இடுப்பால் விளையாடப்படும் ஃபுட்பால்

பந்தை காலால தட்டினா ஃபுட் பால், கையால தட்டினா வாலி பால்... ஆனா, இது ரெண்டுமே இல்லைங்க. வித்தியாசமா வேற மாதிரி ஒரு பந்து விளையாட்டை இப்ப பார்க்கலாமா?
இடுப்பால் விளையாடப்படும் ஃபுட்பால்
x
பந்தை காலால தட்டினா ஃபுட் பால், கையால தட்டினா வாலி பால்... ஆனா, இது ரெண்டுமே இல்லைங்க. வித்தியாசமா வேற மாதிரி ஒரு பந்து விளையாட்டை இப்ப பார்க்கலாமா?

பந்து கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் இந்த விளையாட்டு ஹாக்கி விளையாட்டைப் போலவேதான். தரையோடு பந்தை அடித்து எதிரணி வசம் உள்ள நமது கோலுக்குத் தள்ள வேண்டும். அதற்கு இவர்கள் கையில் பேட் இல்லையே... என்கிறீர்களா? இடுப்புதான் இவர்களின் பேட்.

இந்த விளையாட்டின் பெயர் மெசோ அமெரிக்கன் பால்கேம் (Mesoamerican Ballgame). மெக்சிகோவுக்கு அருகே இருக்கும் Teotihuacán என்ற நகரத்தில் இந்த விளையாட்டு ஐ.பி.எல் மாதிரி. ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என மாறி மாறி இந்த விளையாட்டில் இறங்கி பெண்டு நிமிர்த்தினார்கள் பெண்டு பிள்ளைகள்.

சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய விளையாட்டாம் இது. இன்று விளையாடப்படும் பந்துவிளையாட்டுகள் அனைத்துக்கும் இதுதான் மூல வடிவம் என இந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். இதை மீட்டெடுக்கவும் விரும்புகிறார்கள். ஆனால், மெசோ அமெரிக்கன் பால்கேம் என நீட்டிச் சொல்வது கடினமாச்சே... ஃபுட்பால், வாலிபால் போல இடுப்பால் ஆடும் Hipபால் என இதற்கு பெயர் வைக்கலாமா?

Next Story

மேலும் செய்திகள்