திருச்சியில் இப்படியும் ஒரு சம்பவமா?
திருச்சியில் இப்படியும் ஒரு சம்பவமா?
மணப்பாறை அருகே மரங்களுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடி கிராம மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் புதுப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதுப்பட்டி, கீழபொய்கைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நாளை குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 19ஆம் தேதி ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் மரங்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, மூன்றாவது ஆண்டாக மக்கள் பிரதிநிதிகள், வேளாண் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோருடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மரங்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story