கொடூர மிருகங்கள் இருக்கும் என எச்சரித்தும் மலையில் பந்தாவாக சுற்றித்திரிந்த இளைஞர்..

x

கொடூர மிருகங்கள் இருக்கும் என எச்சரித்தும் மலையில் பந்தாவாக சுற்றித்திரிந்த இளைஞர்..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மலை மீது ஏறிய கேரள இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு கீழே இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்

மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் மலை பகுதிக்கு வந்த கேரளாவை சேர்ந்த நசீம் அக்ரம் அங்கு சுற்றி திரிந்துள்ளார். மலையில் வன விலங்குகள் அதிகம்

உள்ளதென பொதுமக்கள் அறிவுறுத்திய போதிலும் அதனை கேட்காமல் அவர் மலைமீது ஏறியுள்ளார். 2 நாட்கள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அங்கிருந்தவர்கள்

போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து மலைமீது சுற்றிக்கொண்டு இருந்த நசீம் அக்ரமை மீட்டு வந்த போலீசார் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி

வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்