போளூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் கோடை மழை - 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

x

போளூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் கோடை மழை - 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மற்றும் பால்வார்த்து வென்றான் ஆகிய இடங்களில் உள்ள விற்பனை கூடங்களில், விற்பனைக்காக விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து வைத்துள்ளனர். குடோனில் போதிய இடவசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகளை அவர்கள் வெளியே அடுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், திடீரென கோடை மழை கொட்டி தீர்த்ததால், வெளியே அடுக்கி வைத்திருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதம் அடைந்தன. நல்ல விலை கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில், தற்போது குறைந்த விலைக்கு அரசு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், அரசு போதுமான குடோன்களை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்