செல்பிக்கு உகந்தது! - "அட நம்ம 'செஸ் தம்பி குடும்பம்'"- காண குவியும் மக்கள்

x

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள தம்பி குதிரை சிலை, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மெரினாவில், உழைப்பாளர் சிலை அருகே செஸ் தம்பி குதிரை, குடும்பத்துடன் வரவேற்பது போன்று சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மெரினாவுக்கு வரும் பொதுமக்கள் குதிரை சிலைகளுடன் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்