நியோமேக்ஸ் வழக்கு..! மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
நியோமேக்ஸ் வழக்கு..! மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்திடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நாளிதழில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விளம்பரம் வெளியிட வேண்டும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மதுரையைச் சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி, பலர் தாக்கல் செய்த மனு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நியோமேக்ஸ் நிறுவனம் கொடுத்த பட்டியலுக்கும்,
பொருளாதார குற்றப் பிரிவு அளித்த பட்டியலுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை முழுமையாக பெறும் வகையில், பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் தமிழகம் முழுவதும் நாளிதழில் விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.