கல்லூரிக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த ஷாக்... ஒற்றை நபர் செய்த வில்லங்கம் - பரபரப்பு சிசிடிவி

x

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை, சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த ஆண்டனி ரெனிட்டஸ் என்ற மாணவர், திசையன்விளையில் காமராஜர் சிலை அருகே, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கல்லூரிக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், மோட்டார் சைக்கிளை திருடியுள்ளார். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் இலந்தடிவிளையைச் சேர்ந்த சிவபாலன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்