வாய்பிளக்க வைக்கும் செப். மாத GST வசூல்! - இத்தனை லட்சம் கோடியா..!
கடந்த செப்டம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக 1லட்சத்து 73 ஆயிரத்து 240 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்து ஆண்டு
இதே மாதத்தை காட்டிலும் 6.5% அதிகம் ஆகும் என்றும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே
செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரியாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 712 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி வரியில் மத்திய ஜிஎஸ்டியின் பங்காக 31 ஆயிரத்து 422 கோடி ரூபாயும் மாநில ஜிஎஸ்டி யின் பங்காக 39ஆயிரத்து 283 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியின் பங்காக 90 ஆயிரத்து 594 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story