"முடிய ஒழுங்கா வெட்டல.. வா இங்க.." கத்தரிக்கோலோடு நின்ற தலைமை ஆசிரியர்... பள்ளி வாசலில் நடந்த ஹேர் கட்டிங்...

விழுப்புரம் மாவட்டம் வானூர் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது...
x

"முடிய ஒழுங்கா வெட்டல.. வா இங்க.." கத்தரிக்கோலோடு நின்ற தலைமை ஆசிரியர்... பள்ளி வாசலில் நடந்த ஹேர் கட்டிங்...

விழுப்புரம் மாவட்டம் வானூர் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு 6 மாதத்துக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் ஜவியர் சந்திரகுமார். இங்கு பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கட்டுபடாமல் மோசமான சிகை அலங்காரம் செய்து வருவது, கையில் வண்ண கயிறுகள் கட்டுதல்,மாணவிகள் தலைமுழுதும் பூ வைத்தும் மற்றும் முக அலங்காரம் செய்து வருவதும் என காணப்பட்டனர். இவற்றை தடுக்க முடியவில்லை என பெற்றோர் கைவிரித்தனர். இதனால் அதிரடியாக களத்தில் இறங்கினார் தலைமை அசிரியர். அவரே கையில் கத்தரிக்கோல் மற்றும் எண்ணெயுடன் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு வரும் மாணவர்களை தடுத்து நிறுத்தி தலையில் எண்ணை தேய்ப்பது, முடி வெட்டுவது மற்றும் கையில் கயிறு இருந்தால் அவற்றை அறுத்து எறிவது என செயல்பட்டார். மாணவிகள் அதிக பூ வைத்துக்கொள்ளக்கூடாது அலங்காரம் செய்து வரக்கூடாது அனைவரும் சமமாக உடை அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தினார்.

தலைமை ஆசிரியரின் இந்த நடவடிக்கை பெற்றோர் மத்தியிலும் ஊர் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்...


Next Story

மேலும் செய்திகள்