கத்தியை காட்டி மிரட்டி தங்கம், பிளாட்டினம் பறித்தாக புகார் - விசாரணையில் வெளியான பகீர் தகவல்

x

சென்னை மயிலாப்பூரில், கத்தியை காட்டி மிரட்டி தங்கம், பிளாட்டினத்தை பறித்து சென்றதாக பொய் புகார் அளித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை மயிலாப்பூரை பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியம் என்பவர், கடந்த 23ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது நண்பர் சோனியுடன் சேர்ந்து நகைக்கடை வைத்துள்ளதாகவும், கேரளாவை சேர்ந்த ஜூனேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர், தன்னுடைய வீட்டுக்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி, நான்கரை கிலோ தங்கம், 3 கிலோ பிளாட்டினத்தை பறித்துச் சென்றதாக கூறியுள்ளார்.


இதையடுத்து கேரளாவில் இருந்த ஜூனேஷ் மற்றும் ராஜேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடிக்கிடும் தகவல்கள் வெளியாயின. இருவரும் கடந்த ஒரு வருடமாக ராமசுப்பிரமணியம் மற்றும் சோனியுடன் சேர்ந்து தொழில் செய்த‌து தெரிய வந்த‌து. 6 மாத‌த்திற்கு முன்பு, 8 கிலோ தங்ககட்டிகளை இருவரும் கொடுத்த நிலையில், பணத்தை தராமல் ராமசுப்பிரமணியம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்த‌து. கடந்த 23ஆம் தேதி பணத்தை கேட்ட போது, தங்கம், பிளாட்டினம், கணினி மற்றும் கார் ஒன்றை கொடுத்த‌து விட்டு, மிரட்டி பறித்து சென்றதாக ராமசுப்பிரமணியம் பொய் புகார் அளித்த‌து அம்பலமானது. இதையடுத்து, தலைமறைவாகி உள்ள ராமசுப்பிரமணியத்தை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்