சென்னையில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 -அறிவிப்பும்... மாநகராட்சி விளக்கமும்

x

சென்னை மாநகராட்சியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறுவது கட்டாயமாகும். இதன்படி நடுத்தர மக்கள் பயன்பெறும் நோக்கில், சுயசான்றிதழ் அடிப்படையில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பிக்கும் முறை செயல்பாட்டில் உள்ளது. இதற்கான கட்டணங்களில் வெளிப்படை தன்மை பின்பற்றபட வேண்டும் என்பதற்காக கூர்ந்தாய்வு கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணம் இன்றி 2500 சதுரஅடி பரப்பளவு வரை உள்ள மனையில் 3500 சதுரஅடிக்கு உள்ளாக ஒப்புதல் வழங்கும் நடைமுறையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கும் ஏற்கனவே உள்ள கட்டணத்திற்கும் வித்தியாசம் இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது . மற்ற சில மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் சுயசான்றின் அடிப்படையில் அனுமதி வழங்கும் கட்டணம் அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு கட்டணத்தை தற்போது குறைத்துள்ளதாகவும், நடுத்தர மக்கள் சுயசான்றின் அடிப்படையில் எளிமையாக கட்டட அனுமதி பெறுவதை தடுக்க, அரசியல் கட்சிகள் தவறான கருத்துகளை பரப்புவதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்