பள்ளிகளில் அதிரடி மாற்றம் -சென்னை மாநகராட்சியின் புது பிளான்
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த, ஆறரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 15 மண்டலங்களில் மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், விரிவாக்கத்திற்கு முன்பு இருந்த
245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஆறரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள சென்னை மாநகராட்சி, இந்தப் பணிக்கான டெண்டருக்காக, வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிக்கூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரும் நோக்கிலும், சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story