சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் கொடுத்த கம்ப்ளைன்ட்... விசாரணையில் ஆடிப்போன போலீஸ்

x

குதிரை பந்தயத்தில் பணத்தை இழந்து விட்டு, 125 சவரன் தங்க நகையும், 7 லட்சம் ரூபாய் பணமும் மாயமானதாக கூறி போலீசில் புகாரளித்து நபர் நாடகமாடி இருக்கிறார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார். கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்பில் பணிபுரிந்து வரும் இவர், வீட்டில் இருந்த 125 சவரன் தங்க நகையையும், 7 லட்ச ரூபாய் பணத்தையும் காணவில்லை எனக்கூறி போலீசில் புகாரளித்திருக்கிறார்.இந்நிலையில், அவருடைய வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் முன்னாள் பணியாளர்கள் என அனைவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையில், ஒரு துப்பும் கிடைக்காததால், புகாரளித்த பிரதீப் குமார் மீதே சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி காத்திருந்தது. குதிரை பந்தயத்தில் பணம் மற்றும் நகைகளை முதலீடு செய்து பிரதீப்குமார் இழந்தது தெரியவந்திருக்கிறது. இதனால், விரக்தியடைந்த பிரதீப்குமார், மீதம் இருந்த நகை மற்றும் பணத்தை தன் நண்பர்களிடம் கொடுத்து விட்டு, அவர் நாடகமாடியது தெரியவர, பிரதீப்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த 2018இல், பிரதீப்குமாரின் சகோதரரும் இதேபோல் குதிரை பந்தயத்தில் 15 லட்ச ரூபாய் பணத்தை இழந்து விட்டு, வழிப்பறி கொள்ளையர் பணத்தை திருடியதாக நாடகமாடியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்