தீ பிளம்பை கொட்டி பயிற்சி.. - விமானப்படையின் வான்வழி சாகச ஒத்திகை

x

வரும் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமானப்படையின் வான்வழி சாகசம் நடைபெற உள்ள நிலையில், அதற்காக இன்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு தினத்தை ஒட்டி, வரும் 6-ம் தேதி, சென்னை மெரினாவில் விமானப்படையின் வான் சாகசங்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு நடைபெற உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இந்திய விமானப்படையின் வான் சாகசங்கள் நடைபெற உள்ளது

92 ஆண்டு கால நினைவுகளை கூறும் வகையில் இந்த ஆண்டு சிறப்பாக விமானப்படை வான் சாகசங்கள் நடைபெற உள்ளது. அதற்காக சென்னை மெரினா கடற்கரையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வானில் செங்குத்தாக நின்று தீ பிளம்பை கொட்டி பயிற்சி மேற்கொண்டது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்