மின்னல் வேகம்... அலறிய சென்னை மக்கள் - இப்படியாகும் என எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்...

x

மின்னல் வேகம்... அலறிய சென்னை மக்கள் - இப்படியாகும் என எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்... விரட்டி சென்றால் திடீர் திருப்பம்

சென்னையில் சாலையில் தாறுமாறாக சென்ற காரால் விபத்து ஏற்பட்டு 7 பேர் காயம் அடைந்தனர்....

டப்.. டப்... என்று ஆட்டோ... கார்... பைக்குகள் என கண்ணில் தென்பட்ட வாகனங்களை எல்லாம் இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்ற இனோவா கார்... அங்கு சென்ற எல்லோருக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்திவிட்டது..

எழும்பு முறிவால் கதறிய ஆட்டோ ஓட்டுநர், 13 வயது சிறுமி உள்பட 7 பேரை பொதுமக்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை அவர்கள் பின் துரத்திய வேளையில்... ஒய்.எம்.சி.ஏ கல்லூரி விடுதி அருகே கார் நின்றிருக்கிறது. அங்கிருந்து இருவர் ஓட... காவல் ஆணையர் அலுவலகம் அருகே இருவரையும் மடக்கி பிடித்த மக்கள், தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இருவரையும் போலீசார் இழுத்துச் சென்ற வேளையில்.... விபத்த நாங்க ஏற்படுத்தல என வாதம் செய்தனர். அதே வேளையில் இவங்கதான் விபத்தை ஏற்படுத்தியது என திரண்டிருந்த பொதுமக்கள் வாக்கு வாதம் செய்தனர்.

வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாரித்ததில் பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தது கீழ்பாக்கத்தை சேர்ந்த பாரஸ்மால் மற்றும் அவரது மகன் ரோமில் என்பது தெரியவந்தது.

அதேவேளையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியதாக அவர்களது கார் ஓட்டுநர் ரமணி, வேப்பேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். 65 வயதாகும் அவரிடம் விசாரித்த போது 10 ஆண்டுகளுக்கு முன்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததாகவும், பசியால் மயக்கம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுவிட்டது எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பொதுமக்களிடம் சிக்கினால் தாக்கிவிடுவார்கள் என பயத்தில் ஓடியதாக கூறியிருக்கிறார். விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திய காரில் உகாண்டா நாட்டின் தூதரகத்தின் அனுமதி சான்றிதழ் உள்ளதால் பராஸ்மால் யார் என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

மறுபுறம் கார் ஓட்டுநர் ரமணி குடிபோதையில் காரை ஓட்டினாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.

ஓட்டுநர்தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார், அவர் குடி போதையில் இருந்ததாக கூறி போலீஸ் விசாரித்து வரும் நிலையில், மனிதன் பட பாணியில், காரை உரிமையாளர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு பழியை டிரைவர் மீது போட முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்....


Next Story

மேலும் செய்திகள்