பெண்ணின் தலைமுடியை அறுக்கும் வீடியோ : நடத்தையில் சந்தேகத்தால் நடந்த பயங்கரம்..!

பெண்ணின் கைகளை பின்னால் கட்டி வைத்து அவரின் தலைமுடியை இளைஞர் ஒருவர் கத்தியால் அறுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
பெண்ணின் தலைமுடியை அறுக்கும் வீடியோ : நடத்தையில் சந்தேகத்தால் நடந்த பயங்கரம்..!
x

நைட்டி அணிந்தபடி பெண் ஒருவர் தரையில் அமர்ந்திருக்கும் நிலையில் அவரின் கைகளை பின்னால் கட்டிய நபர் ஒருவர், அவரின் தலைமுடியை கத்தியால் அறுக்கிறார். அப்போது அதை ஒருவர் வீடியோவாக பதிவு செய்கிறார். இந்த வீடியோவில் அவர்கள் பேசிக் கொள்வதை பார்க்கும் போது அந்த பெண்ணின் பெயர் பானு என்பதும், முடியை அறுக்கும் நபரின் பெயர் கார்த்தி என்பதும் தெரிகிறது. இருவருமே இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் பானுவின் நடத்தை மீதான பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வீடியோவில் உள்ளவர்கள் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.. 

Next Story

மேலும் செய்திகள்