சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

சிலிண்டர் விலை அதிரடி உயர்வு
x
வீட்டு  உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றுவரை 965 ரூபாய்க்கு விற்கப்பட்ட 14.2 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, தற்போது 1015 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம்  915 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை படிப்படியாக அதிகரித்து, தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்