இன்றைய வானிலை அறிவிப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...
x
இன்றைய வானிலை அறிவிப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.   

மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

வரும் 28 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,

வரும் 29, 30 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்