தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் எவ்வளவு உயர்ந்துள்ளது?
நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான காலத்தில், 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலமாக வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் எவ்வளவு உயர்ந்துள்ளது?
நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான காலத்தில், 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலமாக வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில்
இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கும் "காந்தியடிகள் காவலர் பதக்கம்" வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான காலத்தில், 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலமாக வருவாய் கிடைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 -21 -ல் மொத்தமாக 33 ஆயிரத்து 811 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலமாக வருவாய் கிடைத்துள்ளதாகவும்,
நடப்பு ஆண்டில் 36 ஆயிரத்து 13 கோடி ரூபாய் மூலம் வருமானம் கிடைக்கப்பெற்றதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 76 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அளிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில்,தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 516 லிட்டர் எரி சாராயமும், பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 லட்சத்து 74 ஆயிரத்து 434 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5685 மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அரசின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story