பள்ளிகளுக்கு செல்போன் எடுத்து வரும் மாணவர்களுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு
பள்ளி வகுப்பறை மேஜைகளை மாணவர்கள் அடித்து உடைத்த வீடியோ வெளியானதை அடுத்து, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன் எடுத்து வரக் கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் "ஃபார்வெல் டே" - நடத்த அனுமதி வழங்காததால், வகுப்பறை மேஜைகளை அடித்து உடைத்து காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்கள், பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன்களை எடுத்து வர தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி செல்போன்களை மறைத்து எடுத்து வந்தால், மாணவர்கள் மீதும் அவர்களது பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடாத வண்ணம் மாணவர்களை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story