நில அபகரிப்பு தொடர்பான வழக்கு - ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நில
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. இந்த நிபந்தனைகளை தளர்த்தக் கோரி அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, விசாரணைக்க்கு போதிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டார். மேலும், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தி, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
Next Story