"பின்னால் சதி செய்கிறார்கள்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல பிரிவு சார்பாக ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
"பின்னால் சதி செய்கிறார்கள்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல பிரிவு சார்பாக ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், முன்னாள் முதல்வர்கள் அண்ணாவையும், கருணாநிதியையும் இணைத்தது இஸ்லாமியர்களின் மிலாது நபி நிகழ்ச்சிதான் என்று கூறினார். தற்போதைய சூழ்நிலையில், தமிழினத்தை சாதி, மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்வதாக கூறிய அவர், தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Next Story