களைகட்டிய "டிரான்ஸ் மாரத்தான்-2022" திண்டுக்கல்லைச் சேர்ந்த திருநம்பி முதலிடம்

கோவையில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கான மாரத்தான் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
x
கோவையில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கான மாரத்தான் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற்றும் வகையில், நேரு ஸ்டேடியம் அருகே திருநங்கைகள் "டிரான்ஸ் மாரத்தான்-2022" போட்டி நடைபெற்றது. "மங்கையானவன் அறக்கட்டளை" சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த திருநம்பி கிரிஸ் முதலிடம் பிடித்தார். விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லை என்றும், இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் போட்டியில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்