மாட்டு வண்டி பந்தயத்தில் நடந்த விபத்து.. வேடிக்கை பார்த்தவருக்கு நேர்ந்த துயரம்
போடிநாயக்கனூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தின்போது மாடு முட்டியதில் ஒருவர் பலியானார்.
போடிநாயக்கனூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தின்போது மாடு முட்டியதில் ஒருவர் பலியானார். முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, போடிநாயக்கனூரில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போடிநாயக்கனூர் அருகே புதூரை சேர்ந்த ராமர் என்பவர், விழா மேடையில் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மாடு முட்டி தூக்கி எறிந்ததில் ராமர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பரிதாபமாக ராமர் உயிரிழந்தார். இடது விலா எலும்பில் ஆழமாக மாடு முட்டியதால் ராமர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
Next Story