"மாலைகள் மட்டும் வராது..." - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாலைகள் மட்டும் வராது, மோசமான வசவுகளும் வரும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
x
"மாலைகள் மட்டும் வராது..." - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாலைகள் மட்டும் வராது, மோசமான வசவுகளும் வரும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒசூரில், தமிழியக்கம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில், மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்களை வாழ்த்தும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாலைகள் மட்டும் வராது, மோசமான வசவுகளும் வரும், அதனை தாங்கிக் கொள்ள வேண்டும் என்றார். இரண்டையும் தாக்கிக் கொள்வதுதான் உள்ளாட்சி அமைப்புகளின் வேலை எனவும், இதில் வெற்றி பெற்றால் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்