கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - நடந்தது என்ன?
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - நடந்தது என்ன?
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது அந்த பங்களாவின் காவலாளியாக இருந்த ஓம் பகதூரை கொன்று விட்டு கொள்ளை கும்பல் உள்ளே சென்றது.
பின்னர் பங்களாவின் உள்ளே இருந்த சில பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது எல்லாம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி...
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதேபோல் 2வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சயானின் மனைவி மற்றும் குழந்தைகள் விபத்தில் உயிரிழந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து அரங்கேறிய இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும், ஏதோ மர்மம் இருக்கிறது என்ற சந்தேகத்தையும் உருவாக்கியது...
இந்த சம்பவம் நடந்த போது அதிமுக ஆட்சி இருந்ததால் வழக்கில் தொய்வு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு வழக்கு விசாரணையும் சூடு பிடிக்க தொடங்கியது.
இதற்கென சிபிசிஐடி சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில் அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதனிடையே வழக்கில் முதல் 2 இடங்களில் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்ட வாளையாறு மனோஜ், சயான் ஆகியோர் விசாரணையின் போது பல பகீர் தகவல்களை வெளிப்படுத்தினர்..
அதேநேரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 3 பேர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரை விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நடராஜனை மட்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அவரும் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.
விபத்தில் உயிரிழந்த கனகராஜ் கொடநாடு கொள்ளை வழக்கில் முக்கிய நபராக இருந்த சூழலில் அவரது சகோதரர் தனபால், நண்பர் ரமேஷ் ஆகியோர் தடயங்களை மறைத்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே இந்த வழக்கில் சசிகலாவிடம் நடந்த விசாரணை முக்கியமான ஒரு திருப்பமாக பார்க்கப்பட்டது. 2 நாட்கள் நடந்த இந்த விசாரணையில் சசிகலா பல கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார். கொடநாடு பங்களாவின் உரிமையாளர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் தன்னிடம் பணிபுரிந்த ஊழியர்களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படியாக இதுவரை இந்த வழக்கில் 220 பேரிடம் விசாரணை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரின் மகன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி என முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடந்துள்ளது.
அதேநேரம் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிபிசிஐடி தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கும் நிலையில் சசிகலாவிடம் நடந்த விசாரணையும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விசாரணையின் போது சசிகலா சொன்ன தகவலின் பேரில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் விசாரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
2017ல் நடந்த இந்த கொடநாடு சம்பவம், 2022ல் விறுவிறுப்படைந்திருக்கும் நிலையில் விரைவில் இதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் விலகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது...

Next Story