அண்ணனை வெட்டி படுகொலை செய்த தம்பி - இறந்தவரை விட்டு நகராத வளர்ப்பு நாய்..!
கீழவளவு கிராமத்தை சேர்ந்த தபால் ஊழியரான ராஜீவ்காந்தியை, பணத்தகராறு காரணமாக அவரது தம்பியான கார்த்தி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.
அண்ணனை வெட்டி படுகொலை செய்த தம்பி - இறந்தவரை விட்டு நகராத வளர்ப்பு நாய்
மதுரை அருகே பணத்தகராறில் அண்ணனை சொந்த தம்பியே வெட்டி கொலை செய்த நிலையில், வளர்ப்பு நாய் இறந்தவரை எடுத்து சென்ற வாகனத்தின் பின்னால் ஓடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கீழவளவு கிராமத்தை சேர்ந்த தபால் ஊழியரான ராஜீவ்காந்தியை, பணத்தகராறு காரணமாக அவரது தம்பியான கார்த்தி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். தகவலறிந்து வந்த போலீசார் ராஜீவ்காந்தியின் உடலை போலீசார் ஆய்வு செய்த போது, அவரது வளர்ப்பு நாய் அங்கிருந்து நகராமல் சுற்றி வந்தது. உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்ற போதும், வாகனத்தின் பின்னால் நாய் ஓடியது.
பணத்திற்காக அண்ணனை தம்பியே வெட்டி கொலை செய்த கொடூரத்திற்கு கிடையே, வளர்த்த காரணத்திற்காக இறந்தவரின் பின்னால் நாய் ஓடிய சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
Next Story