"சர்வதேச தரத்தில், உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உள்விளையாட்டரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர்...
"சர்வதேச தரத்தில், உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உள்விளையாட்டரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சர்வதேச அளவில் உள்ளதாக பாராட்டினார். புதிய ஆய்வகங்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். புதிய நுழைவாயில், கணினி மற்றும் ஆங்கில ஆய்வு கூடம் ஆகியவைற்றையும் திறந்து வைத்த நிலையில், பள்ளியின் சார்பில், 3 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தது சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
Next Story