எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு - தங்கத்தமிழ் செல்வன் நேரில் சாட்சியம்

அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கில், தங்கத்தமிழ் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, சாட்சியம் அளித்தார்.
x
அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கில், தங்கத்தமிழ் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, சாட்சியம் அளித்தார்.

2019 மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, அப்போது அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ் செல்வன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வேட்புமனுவில் சொத்துக்கள், கடன்களை மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் ஏற்கவில்லை என குற்றம் சாட்டிய தங்க தமிழ்ச்செல்வன், அரசியல் சூழல் காரணமாக, அப்போது வழக்கு தொடர முடியவில்லை என குறிப்பிட்டார். இதை தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்