மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : காரணம் என்ன? போலீசார் விசாரணை..!

அம்பத்தூர் பள்ளிக்கூட சாலை பகுதியை சேர்ந்தவர் லதா. கணவரை பிரிந்த இவர், தனது 10 வயது மகன் தவஞ்ச்குமாருடன் தனியாக வசித்து வந்தார்.
x
மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : காரணம் என்ன? போலீசார் விசாரணை...

சென்னை அம்பத்தூரில் விஷம் குடித்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அம்பத்தூர் பள்ளிக்கூட சாலை பகுதியை சேர்ந்தவர் லதா. கணவரை பிரிந்த இவர், தனது 10 வயது மகன் தவஞ்ச்குமாருடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சற்றுநேரத்தில் லதா மயக்கமடைய, தவஞ்ச்குமார் உறவினர்களை செல்போனில் தொடர் கொண்டு நடந்ததை கூறியுள்ளார். பின்னர், லதா உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய நிலையில் தவஞ்ச்குமாரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தவஞ்ச்குமாரும் உயிரிழந்ததால், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்