லிப்ட் கொடுத்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
லிப்ட் கேட்ட செவிலியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லிப்ட் கேட்ட செவிலியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வரும் செவிலியர் பணி முடிந்து தன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரிடம் வழியில் லிப்ட் கேட்டு புவனேந்திரன் என்ற இளைஞர் வாகனத்தில் ஏறியுள்ளார். ஒரு கட்டத்தில் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்த அவர், செவிலியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண், புவனேந்திரனை வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு போலீசில் சென்று புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் புவனேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story