"எடப்பாடியின் ஆட்சி பொற்கால ஆட்சி... மக்கள் ஏங்குகிறார்கள்" - அண்ணாமலை பேச்சு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் G.R.வெங்கடேசனின் தந்தை, லயன்ஸ் அம்பலம் ராஜபாண்டியன் நாடாரின் படத்திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது.
x
"எடப்பாடியின் ஆட்சி பொற்கால ஆட்சி... மக்கள் ஏங்குகிறார்கள்" - அண்ணாமலை பேச்சு

ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள் எதிர்பார்ப்பார்களோ, அதுபோன்ற முதல்வராக இருந்து செயலாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் G.R.வெங்கடேசனின் தந்தை, லயன்ஸ் அம்பலம் ராஜபாண்டியன் நாடாரின் படத்திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நாட்டினுடைய தலையெழுத்தை வரும் நாட்களில் மாற்ற வேண்டும் என்றும், ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் கூறினார். அதனை தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பொற்காலம் என்றும், அவருடன் இருப்பது தமக்கும் பாஜகவிற்கும் பெருமை எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்