பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் - 20வது நாளில் விபத்தில் இறந்த கணவர்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, திருமணமான 20வது நாளில், இளைஞர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, திருமணமான 20வது நாளில், இளைஞர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முத்துகிருஷ்ணன் என்பவர், காதலித்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 20 நாளே ஆகிய நிலையில், முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, சுசீந்தரம் அருகே இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த வேன் மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story