பேருந்து டயருக்குள் சிக்கிய பைக், துண்டான கால்கள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
x
பேருந்து டயருக்குள் சிக்கிய பைக், துண்டான கால்கள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பாவக்கல் அருகே உள்ள கரியபெருமாள் வலசையை சேர்ந்த பிரபு, வெங்கடேசன், கோடீஸ்வரன் ஆகிய மூவரும், அனுமந்தீர்த்தத்துக்கு பைக்கில் சென்றனர்.

பெட்ரோல் பங்க் அருகே வளைவில் திரும்பும் போது, அரசு பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே பிரபு என்பவர் பலியானார். மற்ற இருவருக்கும் கால்கள் துண்டான நிலையில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து, சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்