10,12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்

பத்து மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வரும், 17ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
x
பத்து மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வரும், 17ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, 10ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நாளை முதல் 16ஆம் தேதி வரை 10 மற்றும்12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில திருப்புதல் நடைபெற இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் 10ஆம் தேதி நடைபெறுவதால், ஆங்கில பாடத் திருப்புதல் தேர்வு, 17ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், அதை, மாணவர் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்குமாறும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்