தஞ்சை மாணவி பேசிய புதிய வீடியோ வெளியீடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
x
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சை அருகே உள்ள கிறிஸ்தவ பள்ளியில் பயின்று வந்தார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி திடீரென, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஆசிரியர்கள் சிலர் மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து அந்த மாணவி பேசியதாக ஒரு வீடியோவும் வெளியானது. 

இந்நிலையில், மாணவி பேசிய புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், கொரோனா காரணமாக பள்ளிக்கு காலதாமதமாக வந்து சேர்ந்ததால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், அதனால் மதிப்பெண் குறைந்து விட்டதாகவும் மாணவி கூறியுள்ளார். மேலும், விடுதி வார்டன் கணக்கு வழக்குகளை பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அதிகளவு கொடுத்ததாலும், தற்கொலை முடிவை எடுத்ததாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். புதிதாக வெளியான வீடியோவில் மதமாற்றம் குறித்து எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை. 

மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் முயற்சியே காரணம் என குற்றம் சாட்டி பாஜக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்கொலைக்கு காரணம் படிப்பில் மதிப்பெண் குறைந்ததும், அதிக வேலை வாங்கியது காரணம் என்று மாணவி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்