சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் - மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

கேட்பாறற்று சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்து சென்ற காவல்துறையினர் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
x
நெல்லை டவுன் பகுதியில் சாலைகளில் கேட்பாறற்று சுற்றிதிரிந்த மாடுகளை காவல்துறையினர் பிடித்து சென்றதோடு மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமும் விதித்தனர். 

நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் கேட்பாரற்ற நிலையில் மாடுகள் சுற்றி திரிந்து வருகின்றன. 

இது தொடர்பாக பலரும் மாநகராட்சி மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை போலீசார் பிடித்தனர்.

மேலும், மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமும் விதித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்