"நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் கனிமொழி" - அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்

திமுக எம்.பி. கனிமொழி தனக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
x
சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் டி.கே.எஸ். இளங்கோவன் இல்ல திருமணம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய எம்.பி. நவநீதகிருஷ்ணன், நாடாளுமன்றத்துக்கு சென்றபோது, பல்வேறு விஷயங்களை கற்கும் நிலையில் இருந்ததாக கூறினார். விவாதம் ஒன்றின்போது, மத்திய அமைச்சருடன் சண்டைபோடும் நிலை ஏற்பட்டது என நினைவுபடுத்திய அவர், சகோதரி கனிமொழி தான், சர்ச்சையில் சிக்காமல் பார்த்துக்கொண்டதாக பகிர்ந்து கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்