மது விற்பதாக கூறி ஆட்டோவில் சோதனை - அவமானம் ஏற்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக கூறி போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் அவமானம் தாங்காமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
x
காவல் ஆணையர் அலுவலகத்தின் 3வது நுழைவு வாயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

இதை கண்ட இரு காவலர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் தீக்குளிக்க முயன்ற நபர்  பார்க்டவுன் நேவல் மருத்துவமனை சாலையை சேர்ந்த ரபீக் என்பது தெரிய வந்தது. 

ரபீக் ஆட்டோவில் வைத்து கள்ளச்சந்தையில் மது விற்பதாக கூறி, பெரியமேடு போலீசார் வாகனத்தை சோதனையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதுடன் மனைவியும் பிரிந்து சென்றதாக கூறிய ரபீக், காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார். 

இந்த நிலையில் ரபீக்கின் புகார் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்