பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எதிரொலி - தர கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் போது சில இடங்களில் தரம் குறைவாக இருந்ததாக புகார் எதிரொலியாக தர கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம்
x
பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் சில இடங்களில் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. 

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகளை மிக விரிவாக விசாரணை செய்து முதலமைச்சரிடம் விளக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல். 

இனிவரும் காலங்களில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்